இந்தியன் 2 படத்தின் சாங் போல பிளாப் ஆகிரும்!! அனிரூத் தை சைலண்டாக அட்டாக் செய்த பிரபல இசையமைப்பாளர்!!

Photo of author

By Jeevitha

இந்தியன் 2 படத்தின் சாங் போல பிளாப் ஆகிரும்!! அனிரூத் தை சைலண்டாக அட்டாக் செய்த பிரபல இசையமைப்பாளர்!!

கங்கை அமரன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி இசை வடிவமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறுபட்ட திறமைகளைக்கொண்டவர் ஆவார். இவர் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் மறைமுகமாக இந்தியன் 2 பட இசையமைப்பாளரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் 1 படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் தேச பக்தி உணர்வுகளை தனது இசையின் மூலம் தூண்டினார். மேலும் இவரின் இசையானது அப்படத்தில் மக்களின் வரவேற்பபைப் பெற்றிருந்தது. ஆனால் இதை ஒப்பிடுகையில் இந்தியன் 2 படத்தில் இசையானது மக்களிடையே  தாக்கத்தை ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை அமரன் அவரது பேட்டியில், சரியாக இசையமைக்காவிட்டால் இந்தியன் 2 படம் போல ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் விரைவில் திரைக்கு வரவிருக்கும்  தி கோட் படத்தில் ஒரு பாடலை  எழுதியுள்ளார். கங்கை அமரன் முந்தைய பேட்டியில் அவரது அண்ணன் இசைஞானி இளையராஜா பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா அவர்கள் பின்னணி இசையை உருவாக்கும்போது அதிகமான இடங்களில் இசையை சேர்ப்பதைத் தவிர்ப்பதாகக் கூறினார். மேலும் அவர், தனது அண்ணன் கிளாசிக் இசையில் வல்லமை கொண்டவர் என்று கூறினார். மேற்கத்திய இசையில் எம். எஸ். விஸ்வநாதன் வல்லமை படைத்தவர் என்றும் கூறியுள்ளார்.

இவர் அப்பேட்டி ஒன்றில் படம் முழுவதும் அதிக அளவான இசையை நிரப்பினால் அது இந்தியன் 2 போல் ஆகிவிடும் என்று பிரபல இசையமைப்பாளர் அனிருத் -தை சுட்டிக்காட்டியுள்ளார்.