நடு ரோட்டில் இப்படியா.. உதயநிதியின் ரீல் ஹீரோயினை ஏமாற்றிய சிறுவன்!!

Photo of author

By Jeevitha

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரது சொந்த ஊர் மதுரை. இப்போது அவர் சென்னையில் வசித்து வருகிறார். பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல் வந்த 8 வயது சிறுவன், அவரது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவர் இன்ஸ்டாவில் அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன். அப்போது சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100 மீண்டும், வாங்கினேன்.

அப்போது அந்த சிறுவன் புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டன் என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ் இப்படி ஆக்ரோசமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சனை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா? என்ற கேள்வி எழுப்பி ஆம்,இல்லை என்ற ஆப்சன்னை கொடுத்துள்ளார். மேலும் இவர் ஒரு நாள் கூத்து, பொதுவாக எம் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.