கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வந்த சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தேர்வுகளின்றி தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
இந்த நிலையில், 2 வருடத்திற்கு பிறகு தற்சமயம் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மறுபடியும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே இந்த வருடம் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு நேரடித் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
அதன்படி 10 மற்றும் 11 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று மதியம் 2 மணி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுடைய கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதியும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 9ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 10ம் தேதி ஆரம்பமாகிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கு நடுவே 10ம் வகுப்பு தனித்தேர்வுகாண அனுமதிச்சீட்டை தனித்தேர்வர்கள் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், தனித்தேர்வர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.