தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

0
50

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கியமான வழித்தடங்களில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட் தீர்ந்துவிடும். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் கன்னியாகுமரி அதிவேக ரயில், சூப்பர் பாஸ்ட், அனந்தபுரி, வந்தபாரத் ,செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சவாலாக உள்ளது. டிக்கெட் மின்னல் வேகத்தில் காலியாகும் நிலையில் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க விரும்பும் பயணிகள் தட்கல் டிக்கெட்டை முயற்சி செய்கின்றனர்.

ஒரு ரயிலில் 20% டிக்கெட்டுகள் தட்கலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் இனி ஆதாரை ஐஆர்சிடிசி கனக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை ஜூலை ஒன்றாம் தேதி முதல் சரிபார்க்கப்படுவதினால் ஆதார் இணைத்தவர்களும் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் எனவும் ஜூலை 15ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் வெரிபிகேஷன் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!
Next articleஅரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!