ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி!

0
174
Linking Aadhaar with Ration Card is mandatory! Otherwise, you will not be able to get ration goods, the government will take action!
Linking Aadhaar with Ration Card is mandatory! Otherwise, you will not be able to get ration goods, the government will take action!

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி!

இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையளமாக மாறியுள்ளது ஆதார் கார்டு.அதில் தனி மனிதனின் விவரங்கள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்,சொத்து விவரங்கள்,பேங்க் Account,வருமான கணக்கு தாக்கல் என எந்த சேவைகள் பெறவும் ஆதார் என்பது கட்டாயம் என்ற நிலை உருவானது.

இதனால்  தவறான முறைகளில் சொத்துகள் விற்பது,போலியாக ஆவணங்கள் காண்பித்து பேங்கிலிருந்து பணம் பெறவது உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முற்றிலுமாக  நிறுத்தப்பட்டன.மேலும் அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைக்க இது உதவகிறது.

கொரோனா காலகட்டத்தில் கூட வெளி மாநிலங்களில் வசித்து வந்த தொழிலாளிகளுக்கு ஆதார்,மற்றும் ரேஷன் கார்டுகளை காண்பித்து இலவச பொருட்களை  வழங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.இந்த வகையில் தற்போது தமிழக அரசு  ரேஷன் கார்டுடன் ,ஆதார் எண்ணை  கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் பொது மக்கள் தங்கள் குடும்ப  அட்டையுடன் ஆதாரை இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் TNEPDS  என்ற மொபைல் ஆப்பை download செய்து அதில் உங்கள் ஆதார்  எண்ணை வீட்டிலிருந்து எளிய முறையில் சேர்க்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் இதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்கள் ரேஷன் கடைகளில் சென்று தங்கள் ஆதார்  எண்ணை,ரேஷன் கார்டுடன் இணைத்து கொள்ளுமாறு என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு இணைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.