ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

0
32

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் தற்போது ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் பொழுது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு பயணித்தால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கலாம்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நொடியிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்வதால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் தட்கல் டிக்கெட்டை நாடி செல்கின்றனர். இதன் மூலம் விண்ணப்பித்து தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை ஐ ஆர் சி டி சி அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது செயலி மூலம் தக்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது ஓடிபி அடிபடையிலான சரிபார்ப்பு அவசியமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு, கேஒய்சி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தட்கல் டிக்கெட் புக்கிங்கில் ஏற்படும் மோசடிகளை தடுக்கவே இந்த நடைமுறைகள் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உள் நுழைந்து சுயவிவர பகுதிக்கு சென்று சரிபார்ப்பை முடிக்கவும், தட்கல் முன் பதிவின்போது ஓடிபி எளிதாக பெற காலதாமதம் ஆகலாம்..

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது மொபைல் செயலியை பார்வையிட்டு தங்களுடைய கணக்கில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு my account பகுதிக்குச் சென்று authenticate user என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் அதன் பிறகு ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளீடு செய்ய வேண்டும். verify details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வந்தடையும் பெறப்பட்ட ஒடிபியை உள்ளிட்டு ஒப்புதல் பெட்டியை கிளிக் செய்து சமிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தங்களது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

Previous articleவிவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!
Next articleமுருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!