சவுதி அரேபியாவுக்கு அடித்த ஜாக்பாட்!! பூமிக்கடியில் கிடைத்த தங்கத்தை விட மதிப்பு மிகுந்த பொருள்!!

0
173
Lithium has been discovered in Saudi Arabia
Lithium has been discovered in Saudi Arabia

Saudi Arabia: சவுதி அரேபியா நாட்டில் லித்தியம் தனிமம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலைவன நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவுதி அரேபியா தற்போது உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு, காரணம் அந்த நாட்டில் நிறைந்து இருக்கும் எண்ணெய் வளங்கள் தான். சவுதி அரேபியா உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும்.

வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெயால் இயங்குகிறது. அத்தகைய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதால் சவுதி அரேபியா இன்று வானுயர்ந்த கட்டிடங்களை கொண்ட வளமிக்க நாடாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் உலகில் பல நாடுகள் கச்சா எண்ணெய் மூலம் வரக்கூடிய ஆற்றலுக்கு மாறாக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் தயாரித்து வருவது மட்டுமல்லாமல் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தேவை உலக அளவில் குறைந்து வருகிறது. எனவே சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் சுற்றுலாத்துறை. சவுதி அரேபியா சுற்றுலாத் துறையை மேம்படுத்த உலகிலே உயரமான கட்டிடத்தை கட்டி உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட கடல் மீதான தீவு அங்குதான் இருக்கிறது.

இந்த நிலையில் அந்த நாட்டிற்கு மிகப்பெரிய  ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயன்படும் லித்தியம் உலோகம் அதிக அளவில் அந்த நாட்டின் நிலப்பரப்பில் இருப்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த பொருள் வரும் காலங்களில் மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படும்.

Previous articleபார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் நடத்தப்பட்டதில் 97.80 கோடி மக்கள் வரிப்பணம் வீண்!!
Next articleமீண்டும் சேதப்படுத்தும் கோவில் சிலைகள்!! வங்கதேசத்தில் நடப்பது என்ன?