2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!!

Photo of author

By Janani

2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!!

தெகிடி படத்தில் நடித்த பிரதீப் கே விஜயன் 2 நாள்களாக பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடிகர் பிரதீப் கே விஜயன் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “சொன்னா புரியாது” திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இவர் உடல் பருமனாக இருப்பதால் பல படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார்.

மேலும் இவர் நடித்த தெகிடி படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடும், மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் ராகவா லாரன்ஸின் “ருத்ரன்” படத்தில் நடித்திருந்தார்.

பிரதீப் கே விஜயன் பி.டெக் (ஐடி) படித்துள்ளார். ஆனால் இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தின் நடிப்பு துறையில் கால் பதித்தார். நடிப்பு மட்டுமின்றி பல படங்களுக்கு சப்டைட்டில் பணியும் செய்து வந்துள்ளார். சென்னையில் உள்ள பாலவக்கத்தில் தனியாக ரூம் எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் இவரது நண்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு போனில் தொடர்பு கொண்ட போது இவர் பதில் அளிக்காததாலும், இவர் குறித்த தகவல்கள் தெரியாததாலும் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மறைவிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.