தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது.
அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் மூலம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார்.
அடுத்து கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். முதன் முறையாக ரஜினியுடன் லோகேஷ் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்திற்கு பின் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என தொடர்ந்து படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் லோகேஷ் நடிக்கவுள்ளாராம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார் என சொல்கிறார்கள். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றே கணிக்கப்படுகிறது.