நல்ல மனம் வாழ்க! ஜித்தன் ரமேஷ்க்கு குவியும் பாராட்டு!

Photo of author

By Sakthi

தமிழ் திரையுலகில் நடிகர் ரமேஷ் கடந்த 2005ஆம் வருடம் வெளியான அஜித்தின் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது பாகத்தில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் ஜித்தன் ரமேஷ் நோய்த்தொற்று காலத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறை ஊழியர்களுக்கு மற்றும் சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கும், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், போன்றவற்றை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஏதோ என்னால் முடிந்தது என்று பதிவிட்டு நீங்களும் வாருங்கள் ஒன்றாக இணைந்து இந்த நோயினை வெற்றி கொள்வோம் என்று பதிவிட்டிருக்கிறார். ஜித்தன் ரமேஷின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.