National

கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!

Lorry losing control! 6 lives tragically sacrificed!

கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரம் பஹ்வார்கொல் என்ற பகுதியில் உள்ள அகிரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் இன்று காலை நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோரவிபத்தின் பிடியில் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து உள்ளூர் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Comment