இன்று உங்களுக்கு காதல் கசக்கும்! இன்றைய ராசி பலன்கள்!

Photo of author

By Hasini

இன்று உங்களுக்கு காதல் கசக்கும்! இன்றைய ராசி பலன்கள்!

மேஷ ராசி:

     இன்று நீங்கள் முடிவு எடுக்கும் முன் நன்கு யோசித்து எடுக்கவும். பணம் செலவாக கூடும். பணி அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் உறவு இன்று பலப்படும். உங்கள் கவன குறைவினால் பண இழப்பு ஏற்படலாம்.

ரிஷப ராசி:

     உங்களின் நம்பிக்கை உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.அது உங்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். உங்கள் பணிகளை உற்சாகமாகவும்,எளிதாகவும் மேற்கொள்வீர்கள். துணையின் உணர்வினை புரிந்து நடப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும்.

மிதுன ராசி:

     இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களின் செயல்களில் வெற்றி ஏற்படும். உங்கள் கண்ணோட்டத்தின் மூலம் நல்ல முடிவை எடுப்பீர்கள். இன்று நீங்கள் தரப்பட்ட வேலைகளை ஆர்வமாக முடிப்பீர்கள். காதல் கசக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

கடக ராசி:

     இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். யார் சொல்வதையும் நம்ப வேண்டாம். யதார்த்தமாக இருங்கள். பணியில் சாதக பலன்களை காண கடினமாக உழைக்க வேண்டும். முயற்சியை நம்பினால் வெற்றி கிடைக்கும். பணம் செலவாக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி:

     இன்று உங்களின் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்மறை எண்ணங்களை வளர்க்கவும். சக பணியாளர்களுடன் பொறுமையை கடைபிடிக்கவும். துணையுடன் வாக்குவாதம் வரலாம். பணத்தை கவனிக்க தவறினால் இழக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி:

     உங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறலாம். நீங்கள் சாதிக்க உங்களை மேம்படுத்த வேண்டும். பணியில் சவால்கள் நிறைந்து காணப்படும். அதையும் மீறி வெற்றி அடைவீர்கள். தகவல் தொழில் நுட்பம் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். காதலின் இனிமை உணர்வீர்கள்.

துலாம் ராசி:

     இன்று சிறந்த பலன்கள் ஏற்படும். சில தடைகள் ஏற்பட்டாலும் முடிவில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படும். சூழ்நிலையை பொருத்து நீங்கள் மாற வேண்டும். காதலை பொறுத்தவரை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

விருச்சிக ராசி:

     இன்று உங்களது இலக்கை நோக்கி செயல்படும் போது வெற்றி கிடைக்கும். யோசித்து பணிகளை மேற்கொள்ளும் போது வெற்றியாகவும், எளிதாகவும் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.நிதி நிலைமை சொல்லும்படி இருக்காது.

தனுசு ராசி:

     இன்று சில கால தடைகளுக்கு பிறகு இலக்கை பூர்த்தி செய்வீர்கள். கூடுதல் முயற்சி இருப்பின் முடிவில் வெற்றி காணலாம். இடைவிடாத முயற்சியுடன் செயல்படவும். காதல் இன்று குறைந்து காணப்படும். பணம் செலவாக கூடும்.

மகர ராசி:

     இன்று நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். ஆற்றலை உணர்ந்து செயல்படுங்கள். தகவல் தொடர்பு மூலம் வெற்றி காண்பீர்கள்.காதலுக்கு ஏற்ற நாள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.தேவையான அளவு பணவரவு இருக்கும்.

கும்ப ராசி:

     இன்று அனுகூலமான முடிவுகள் எடுக்க மனநிலை தெளிவாக இருக்கும். பணிகள் அதிகரித்து காணப்படும். பணியின் காரணமாக பயணம் ஏற்படலாம். வாக்குவாதம் ஏற்படும். உங்களின் காதலை தந்தை ஏற்று கொள்ள மாட்டார். வரவும், செலவும் சமமாக இருக்கும்.

மீன ராசி:

     நீங்கள் திட்டமிட்டு செயல்படும் போது திருப்தி கிடைக்கும். இதன் மூலம் பாதுகாப்பாக உணரலாம். வேலை இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். எனவே கவனமுடன் இருக்கவும். மனக்குழப்பம் காரணமாக தவறான முடிவுகளை எடுக்கலாம்.