காதல் தோல்வி மிகவும் கொடூரமானது!! மனம் திறந்த நயன்தாரா!!

Photo of author

By Jeevitha

Cinema News: இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் “Nayanthara- beyond fairy tale” என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தில் நயன் தனது காதல் தோல்வி பற்றி தனது கணவர் விக்னேஷிடம் கூறியுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் ஆவணப்படம் வெளியான நிலையில் அந்த படத்தில் நயன்தாரா தனது காதல் தோல்வி பற்றி கூறியுள்ளார். அதில் நயன்தார என் முதல் காதல் மீது நான் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தேன். அந்த காதலுக்காக நான் சினிமா துறையை விட்டு விலகுவதாக இருந்தேன்.

ஆனால் அந்த முடிவு என் முடிவு அல்ல என கூறியிருந்தார். ஆனால் அந்த காதலுக்கான நம்பிக்கை அவரிடம் இல்லை என நான் உணர்ந்தேன்.அதனால் தான் எங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டது என கூறி இருந்தார். ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் பெண்கள் தான் என நினைக்கிறீர்கள். ஆனால் அதிலும் ஆண்களுக்கும் பங்கு உண்டு என யாரும் நினைப்பதில்லை என நயன்தாரா கூறினார். ஆனால் அந்த காதல் பிரிவுக்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் மீது எனக்கு காதல் ஏற்பட்டது என கூறியுள்ளார்.

ஆனால் அந்த காதலை சமூக வலைதளங்களில் நாகூர் பிரியாணி நாய்க்கு கிடைக்கும் என்றால் யாராலும் மாற்ற முடியாது என பல கருத்துகள் வந்தன. ஆனால் அதை நான் விளையாட்டாக எடுத்துக் கொண்டேன் என விக்னேஷ் கூறினார். எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இறுதியில் நயன்தாராவின் முடிவையே நான் ஏற்றுக் கொள்வேன் என கூறியிருக்கிறார். முக்கியமாக நயன்தாரா, தன் அம்மாவை விட விக்னேஷ் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார் என கூறியுள்ளார்.