காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை!

0
146
Love wife murder! The truth revealed by the mother's action!
Love wife murder! The truth revealed by the mother's action!

காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை!

காதலித்தாலும் முடிவில் திருமணம் தான், வீட்டில் பார்த்து வைத்தாலும், முடிவில் திருமணம் தான் ஆனால் எல்லா இடங்களிலுமே சந்தேகம் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒன்றுதான். ஏதோ ஒரு காரணத்திற்காக பெண்களை அல்லது  மனைவியை சந்தேகப்படுகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க மறுக்கின்றனர். கல்யாணத்தின் முன் இருந்த அந்த நம்பிக்கை கல்யாணம் ஆன பின் எங்கே காணாமல் போகிறது.

அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரில், போலீஸ் எல்லைக்குட்பட்ட பிடிஎம் லேஅவுடில், வசிப்பவர் அஜீத். 32 வயதான இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சானியா என்பவரை காதலித்து பின் இருவரும் திருமணம் செய்திருந்தனர். அஜித்தும் அவரது மனைவியும் சேர்ந்து மது குடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். இருவருமே மதுவிற்கு அடிமையானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும் தினமும் வீட்டில் சேர்ந்து மது அருந்துவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி சானியா வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் கணவர் அஜீத். அங்கு சானியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சானியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜித் இடமும் விசாரித்தனர்.

அப்போது அஜீத் தனது மனைவி உடல்நலக் குறைவினால் வீட்டில் மயங்கி விழுந்ததாகவும் அதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து மர்மசாவு என்பதைப்போல வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சானியாவின் தாய் வந்து போலீசாரிடம் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம், என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அந்த புகாரின் பேரில் அஜித்தை மீண்டும் விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டனர். அப்போது அஜித் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். சானியா வீட்டில் இருந்து அடிக்கடி வெளியே சென்று வந்ததாகவும், அது தொடர்பாக பேசும் போது, ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை தலையில் அடித்துக் கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் போலீஸிடம் இருந்து தப்பிக்க அவர் உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியதையும் அவரே தெரிவித்தார். இதனால் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleதாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!
Next articleயூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு!