கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

0
120

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்சமயம் பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது.

நவி மும்பை, திவி பாட்டில் மைதானத்தில் நேற்று நடந்த 66 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியை சந்தித்தது.

லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை சற்றேறக்குறைய உறுதி செய்திருக்கின்ற சமயத்திலும், நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே விளையாட்டுக்கான வாய்ப்பு நீடித்திருக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் குயிண்டன் டி காக் உள்ளிட்டோர் களம்புகுந்தனர்.

ஆரம்பம் முதலே 2 பேரும் எதிரணியின் பந்துவீச்சை பதம் பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக குயின்டன் டி காக் சிக்ஸர் மழை பொழிந்தார் .நடப்பு சீசனில் இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சவுதி வீசிய 19வது ஓவரில் ராகுல், குயின்டன் டி காக் 4 சிக்சர்களை விளாசினர் இறுதி ஓவரை ரசல் வீச அந்த ஓவரில் குயிண்டன் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

கடைசியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் சேர்த்திருந்தது. டிகாக் 70 பந்துகளில் 140 ரன்களை சேர்த்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 211 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி.

தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஜித் ரோமர் 4 ரன்னிலும், ஆட்டமிழந்து அதிர்ச்சியை வழங்கினர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நிதீஷ் ஜோடி மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த நித்திஷ் 42 ரன்னில் நடையை கட்ட, ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் கண்டு ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டது. முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், சுனில் நரேன் உள்ளிட்டோர் அதிரடி கட்டியதாக சொல்லப்படுகிறது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 வருடங்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார் 2வது பந்தில் அவர் சிக்சர் அடிக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3-வது பந்தில் சிக்ஸர் பறந்தது. 4வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது, 5வது பந்தில் ரிங்கு சிங் கவர் திசையில் அடிக்க முயற்சி செய்தார். அந்தப் பந்தை ஏவின் லீவிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் போல்ட் செய்யப்பட்டார். இதன் காரணமாக, 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதோடு லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது.

Previous articleபேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு! காங்கிரஸ் கட்சி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
Next articleநீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இன்னிக்கு உங்களுக்கு யோகமான நாள்!