குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Photo of author

By Sakthi

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Sakthi

Lucknow to field in new jersey after Gujarat!!
குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!!
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த ஜெர்சியானது மோஹன் பகான் அவர்களின் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியாகும்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வருகிற 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது.
இந்த புதிய நிற ஜெர்சியை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா, மார்கஷ் ஸ்டோய்னஸ், ஆயுஷ் பதோனி ஆகிய மூவரும் புதிய ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படத்தை  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.
இதுவரை 13 போட்டிகளில் 3ல் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 7 போட்டிகளில் வென்று 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மே 20ம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.