சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால், சந்திரன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்விற்கு தான் சந்திர கிரகணம் என்று பெயர். இந்த நிகழ்வானது பௌர்ணமி நாளில் ஏற்படக்கூடியது
கிரகணம் நிகழும் நேரம்:
இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14ஆம் தேதி காலை 9:27 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:57 மணிக்கு முடிவடைகிறது.
எங்கெல்லாம் தெரியும்:
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டிகா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கானா, நைஜீரியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தெரியும்.
கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் இந்த சந்திர கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
செய்ய வேண்டிய எளிய பரிகாரம்:
இந்த கிரகணத்தின் போது உங்கள் மனதிற்குப் பிடித்த தெய்வத்தை நினைத்து ஜபம், தியானம் ஆகியவற்றை செய்யலாம். ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் சரவணபவ இது போன்ற மந்திரங்களையும் உச்சரிக்கலாம். சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம்.
இந்த கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை:
மேலே குறிப்பிட்டுள்ள கிரகண நேரத்தின் பொழுது கிரகண அலைகள் நம்மை தாக்காமல் இருக்க வெளியில் செல்லக்கூடாது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
கிரகண நேரத்தின் போது சமையல் செய்யக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது கிரகணம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பின்பாகவோ தான் உணவினை உண்ண வேண்டும்.
கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை தொடவோ அல்லது கையில் வைத்திருக்கவோ கூடாது. அதேபோன்று கிரகண நேரத்தின் பொழுது சண்டை போடுவதோ அல்லது அவதூறு வார்த்தைகளை பேசுவதோ கூடாது.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
சந்திர கிரகண நேரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. யாகசாலை அமைத்து ஹோமங்கள் வைப்பது மிகவும் பலன் தரும். கிரகணக்கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பைப்புல் போட்டு வைப்பது மரபாகும்.
கிரகண சமயத்தில் நமது இஷ்ட தெய்வங்களை நினைத்து ஜபம், தியானம் போன்றவற்றை செய்வது கூடுதல் பலனை தரும். மாணவர்கள் பாட புத்தகம் படிக்கலாம். சந்திர கிரகணம் முடிந்ததும் தண்ணீரில் உப்பு, மஞ்சள், மூன்று வேப்பிலை ஆகியவற்றை கலந்து குளித்தால் கிரகணத்தால் ஏற்பட்ட கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் மடிந்து விடும்.
கிரகணம் முடிந்த பின்பு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வழிபடுவது நன்மையை தரும்.