இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை.
எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் இந்த நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், பெரிய ஹீரோக்களை வைத்து லைக்கா நிறுவனம் எடுத்த எல்லா படங்களுமே அந்த நிறுவனத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.
ரஜினியை வைத்து எடுத்த தர்பார் மற்றும் வேட்டையன், கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி போன்ற எல்லா படங்களுமே நஷ்டத்தை கொடுத்தது. இதனால், லைக்கா நிறுவனம் மீண்டும் எழுமா என்கிற சந்தேகமே பலருக்கும் வந்தது. குறிப்பாக இந்தியன் 2 ம் மற்றும் விடாமுயற்சி படங்கள் லைக்காவுக்கு பல கோடி நஷ்டங்களை கொடுத்தது. அதேபோல், ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான லால் சலாம் படமும் தோல்வியடைந்தது.
எனவே, லைக்காவின் கதை முடிந்தது என திரையுலகிலேயே பலரும் பேச துவங்கினார். இப்போது இந்தியன் 2 மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ஒரு படம் என மொத்தம் 2 படங்கள் லைக்காவின் கையில் இருக்கிறது. இந்த படங்கள் இல்லாமல் இன்னும் 10 படங்களை தொடர்ந்து தயாரிக்க லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதுவும் பெரிய நடிகர்களை வைத்து இந்த படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார் சுபாஷ்கரன். இருவரும் இணைந்து இந்த படங்களை தயாரிப்பார்கள் என சொல்லப்படுகிறது.