நடிகர் சிம்பு திரைப்படம் நடிக்க தடை !! உயர்நீதிமன்றம்  அதிரடி  உத்தரவு!!

0
122
Madras High Court orders return of Rs 1 crore security deposit paid by actor Simbu in "Corona Kumar" film issue
Madras High Court orders return of Rs 1 crore security deposit paid by actor Simbu in "Corona Kumar" film issue

Actor Simbu: “கொரோனா குமார்”  பட விவகாரம் நடிகர் சிம்பு செலுத்திய ஒரு கோடி உத்தரவாத தொகை திரும்ப வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட தயாரிப்பு  நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதாவது, “கொரோனா குமார்” படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து முடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு சுமார்  9 கோடியே 50 லட்சம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அதன் பிறகு நடிகர் சிம்பு விற்கு முன் சம்பள பணமாக 4 கோடியே 50 லட்ச ரூபாய் கொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் தான் சிம்பு “கொரோனா குமார்” படத்தில் நடிக்காமல் பிற படங்களில் நடிக்க சென்று இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது வேல்ஸ்  தயாரிப்பு நிறுவனம். சிம்பு படம் நடிக்க தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நடிகர் சிம்பு உத்தரவாத தொகையாக ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு வழங்கியது. இந்த நிலையில், நடிகர் சிம்புவிற்கும்  வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்திற்கு உள்ள பிரச்சனையை தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை நடுவராக நிமித்து இருந்தது நீதிமன்றம்.

எனவே தங்களது வழக்கை இரு தரப்பினரும் திரும்ப பெற்றுக் கொண்டதால் சிம்புவிடம் வைப்பு நீதியான ஒரு கோடியை திரும்ப கொடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Previous articleபால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!
Next articleஓடும் பேருந்தில் பெண் செய்யும் காரியமா இது? பாதி வழியில் நிறுத்தப்பட்ட பஸ் பதறிய பயணிகள்!!