இலக்கை சரியாக பயன்படுத்திய எம்பி! மக்கள் பாராட்டு!

Photo of author

By Sakthi

மருத்துவ நிதி உதவியாக ஒரு வருடத்தில் 40 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை பெயரால் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து சென்ற இந்த ஒரு வருடத்தில் மட்டும் 40 பேருக்கு ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவநிதியாக கிடைத்திருக்கின்றது.

சென்ற நிதியாண்டில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மருத்துவ உதவிகளை கோரி மக்களிடமிருந்து 74 மனுக்கள் வாங்கப்பட்டு பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அவற்றில் 40 நபர்களுக்கு சுமார் ஒரு கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மருத்துவ நிதி உதவியாக இதுவரை கிடைத்திருக்கின்றது.

இதுபோக இன்னமும் 34 பேருக்கு நிவாரண நிதி வர வேண்டி இருக்கின்றது.

இதுவரையில் பல புற்று நோய்களால் பாதிப்படைந்த 36 பேருக்கு 97 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியும் , இருதய அறுவை சிகிச்சை சமந்தமாக 4 பேருக்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஒரு வருடத்திற்குள் ஒரு கோடி ரூபாய் பெற்றுத் தரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வந்தோம். கொரோனா காலதாமதத்தால் , இலக்கை அடைய மூன்று மாதகாலம் கூடுதலாக போய்விட்டது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.