தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஜூலை மாதத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கான இந்த தொகை அடுத்த சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஜூலை 15 ஆம் தேதி முதல் மீண்டும் முகாம்கள் நடத்தப்படுகின்றது, இந்த முகாம்களில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 4 சக்கரம் வைத்திருக்கும் வீடுகளில் உள்ள பெண்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என புதிய விதிமுறையை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை 15ஆம் தேதி முதல் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் சரிபார்ப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக 1000 ரூபாய் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின் விரிவாக்கத்தின் படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ,புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
இரண்டு லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக 2000 வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இளங்கலை படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கு ஆயிரம் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில் புதுமைப்பெண் திட்டம் போல மாணவர்களுக்கு ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தபட்டு வருகின்றது. இத்திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும்.