தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா!
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் அவர்களை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து பாஜக கட்சியின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். உண்மையான சிவசேனா கட்சியும் வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு தான் சொந்தம் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று அதாவது ஜூன் 1ம் தேதி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அவர்களை அவருடய இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து “சிவசேனா கட்சி பிளவுக்கு பின்னர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் முதலமைச்சர்க பதவியேற்ற பின்னர் நடக்கும் சந்திப்பு இது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இருவரும் சந்தித்து அரசியல் விவரம் குறித்து பேசினர். மேலும் இந்த சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தல், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது” என்று தகவல் வெளியாகியுள்ளது.