ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Photo of author

By Sakthi

ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Sakthi

Mahathir Mahamuth, a gym owner in Salem, died tragically after exercising for too long

Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் மகமுத்.

மேலும் ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த பின் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்று இருக்கிறார். அவ்வாறு அவர் குளிக்க சென்று நீண்ட நேரம் ஆகி இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர் முஸ்தபா  ஜிம்மில் உள்ள குளியல் அறைக்கு சென்று இருக்கிறார். அங்கு சென்று பார்த்தபோது இந்த மகாதிர் மகமுத் குளிப்பதற்கான எந்த வித அறிகுறிகளும் இல்லை.

இதனால் மேலும் அச்சம் அடைந்த அவர் ஜிம்மில் இருந்தவர்களின் உதவியுடன் பாத்ரூம் கதவை திறந்து இருக்கிறார்கள். அப்போது  மகாதிர் மகமுத் மயங்கிய நிலையில் காது மற்றும் மூக்கில் ரத்தம் வந்தவாறு  கீழே விழுந்து கிடந்தது   இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

அங்கு மருத்துவர்கள்  பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்தார்கள். இது குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரு குறித்து ஜிம்மில் விசாரணை நடத்திய போது மகாதிர் மகமுத் தினமும் ஹெவி வொர்க் அவுட் செய்வார் என்றும், அதிகப்பட்சமாக 150 முதல் 200 கிலோ வரை எடை தூக்குவார்  என தெரியவந்துள்ளது.

அதிக நேரம் உடற்பயிற்சி செய்த பின்  நீராவியில் குளித்து இருக்கிறார் மகாதிர் மகமுத்  மயக்கத்தில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.