Mahishashi sambrani: செவ்வாய் கிழமை இந்த தூபம் வாங்கி வந்து போடுங்கள்..!

Photo of author

By Priya

Mahishashi sambrani: இந்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நாள் சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. மேலும் வாரத்தில் வெள்ளி, செவ்வாய் என்றால்  வீடுகளில் தூபம் போடும் பழக்கமும் இருந்து வருகிறது. அனைவரும் கடைகளில் விற்கப்படும் சாம்புராணி வாங்கி வந்து தூபம் போடுவார்கள். இதனால் அந்த நாட்கள் மட்டும் வீடுகளில் பக்திபரவசமாக காணப்படும்.

இனி நீங்கள் தூபம் போடும் பொழுது சாம்புராணிக்கு பதிலாக இனி இந்த தூபத்தை வாங்கி வந்து வீடுகளில் போடுங்கள். உங்கள் வீட்டில் தங்கி இருந்த தீய சக்திகள், கண் திருஷ்டி என அனைத்தும் உங்கள் வீடுகளை விட்டு காணாமல் போய்விடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது இந்த தூபம். நாம் இந்த பதிவில் மகிஷாஷி எனப்படும் சாம்புராணியை வீடுகளில் போட்டு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் (Mahishashi sambrani benefits in Tamil) காண்போம்.

மகிஷாஷி தூபம் – Mahishashi sambrani

இந்த தூபம் மற்ற தூபங்கள் போல் இல்லாமல் சற்று சக்தி வாய்ந்த தூபமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை பற்றி ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த மகிஷாஷி தூபம் பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை 200 கிராம், 300 கிராம் என்று வாங்கி வந்து காற்று புகாத பாட்டில்களில் அடைத்து வைத்து செவ்வாய் கிழமைகளில் தூபம் போடலாம்.

Mahishashi sambrani

எந்த நேரத்தில் தூபம் போட வேண்டும்

பொதுவாக செவ்வாய் கிழமை துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய்கிழமையில் முக்கியமாக இராகு கால நேரத்தில் இந்த தூபத்தை போட வேண்டும். செவ்வாய்க்கிழமை இராகு காலத்தில் தூபம் போட்டால் அவ்வளவு நன்மையாக பார்க்கப்படுகிறது.

பயன்கள்

இந்த மகிஷாஷ தூபத்தில் மகிஷாசுர வர்த்தினி காணலாம் என்பது நம்பிக்கை. நெருப்பில் இந்த மகிஷாஷி தூபத்தை போடும் பேதை சிறிதாக வெடித்து சிதறுவதை காணலாம்.

இந்த தூபத்தை போடுவதால் வீட்டில் துஷ்ட சக்திகளால் ஏற்பட்ட பீடைகள் விலகும். லெட்சுமி கடாஷம் பொங்கி வழியும் என்பது நம்பிக்கை.

நல்லது நடக்குமா? நடக்காதா? என்ற நம்பி இல்லாமல், நல்லது நடக்கும் என்று நம்பி இந்த தூபத்தை வீட்டில் போட்டு வாருங்கள், கெட்டது விலகி, மன அமைதி கிடைக்கும்.

மேலும் படிக்க: முருகனின் பாதம் காண இங்கு வாருங்கள்..ஞான மலையில் இருக்கும் முருகப்பெருமான்..!