பாஜகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர்.. அச்சத்தில் இபிஎஸ்!!

0
204
Main leader of AIADMK giving re-entry to BJP.. EPS in fear!!
Main leader of AIADMK giving re-entry to BJP.. EPS in fear!!

ADMK BJP: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு முயற்சித்தும் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. பாஜக தமிழகத்தினுல் வரவிடாமல் தடுப்பதே, பாஜகவின் இந்துத்துவவாத கொள்கையை தமிழக மக்கள் எதிர்ப்பதே ஆகும். இந்த முறை பீகாரில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது பாஜகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. இதன் காரணமாக பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இபிஎஸ், பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு இரண்டு நிபந்தனைகளை முன் வைத்தார். ஒன்று, அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், மற்றொன்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதாகும். இதில் அண்ணாமலையின் பதவி விலகல் மட்டுமே அப்போதைக்கு நடந்தது. ஓபிஎஸ்யும், தினகரனும், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, நயினாரின் செயல்பாடுகள் சரியில்லை என கூறி கூட்டணியிலிருந்து விலகினார்கள். இவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜகவை சேர்ந்தவர்கள் எவ்வளோவோ முயற்சி செய்தும் அதற்கு இவர்கள் இணங்கி வரவில்லை.

ஆனால், தற்சமயம் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய போவதாக மறைமுகமாக கூறியுள்ளார். மீண்டும் பாஜகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், NDA கூட்டணியில் இணைவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கூறினார். இவரின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு வேலை இவர்கள் மீண்டும், பாஜகவில் இணைந்தால் அதற்கு இபிஎஸ்யின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், அதிமுக NDA கூட்டணியில் தொடருமா போன்ற பல்வேறு கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர். இதற்கான முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleதவெக-அமமுக கூட்டணி.. ஓப்பனாக பேசிய டிடிவி தினகரன்!! குளோஸ் ஆகும் இபிஎஸ்யின் சமஸ்தானம்!!
Next articleசிபிஐயிடம் சிக்கிய தவெகவின் முக்கிய புள்ளிகள்.. அதிரும் அரசியல் அரங்கு!!