TMMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கட்சியின் தொண்டர்கள் பல பேர் வேறு கட்சியில் இணைந்து வருவது அதிமுகவின் வழுவை குறைத்து வருகிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவதாக தகவல் பரவியுள்ளது.
இது ஜான் பாண்டியனின் தமமுக கட்சியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு தமமுக தலைவர் ஜான் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் இது போன்ற பரப்புரையை மேற்கொள்வது அரசியல் பயணத்திற்கு ஆபத்து என்றும் கூறியிருந்தார்.
இதன் காரணமாக அதிமுகவில் ஜான் பாண்டியனுக்கு எதிராக சலசலப்பு ஏற்பட்டது. மேலும் திருநெல்வேலி தொகுதிக்கு பதிலாக சென்னையில் ஒரு தொகுதியை கொடுத்து தனக்கு துரோகம் இழைத்ததாக அதிமுக மேல் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதன் காரணமாக அதிமுகவிலிருந்து தமமுக விலகுவதை ஜான் பாண்டியன் உறுதி செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகளும், முக்கிய கட்சியின் விலகுதலும் அதிகரித்து வருவதால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிலை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.