20-வது பேரை காவு வாங்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு அந்த விமானநிலையமே தான் காரணம்:? வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

Photo of author

By Pavithra

வெளிநாடு வாழும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் துபாய் சென்றது.நேற்று மாலை 174 பயணிகள்,10 குழந்தைகள்,2 விமானிகள்,6 சிப்பந்திகள் என மொத்தம் 191 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது.இவர்களைத் தொடர்ந்து தேசிய மீட்பு குழு படையினரும் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர்,என அனைவரும் விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கேரள முதல்வருக்கு அலைபேசியின் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.நள்ளிரவு 12 மணி வரை இந்த மீட்பு பணியானது நடைபெற்றது.

இந்த விமான விபத்தில், விமானி, துணை விமானி உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.மொத்தமாக எத்தனை பேர் இறந்தனர் ,காயமடைந்தவர்களின் எண்ணிக்கை போன்றவற்றின் விவரம் சரிவர இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விமானம் விபத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்று கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக விமானம் தரையிறங்குவதியில் சிரமம் ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


மற்றொரு காரணமாக கூறப்படுவது,கோழிக்கோடு விமான நிலையத்தின் வடிவமைப்பு, கோழிக்கோடு விமான நிலையம் மலையின் மீது அமைந்துள்ளதால் அதனை table top airportஎன்று அழைக்கப்படுகின்றது.மலைமீது அல்லது உயரமான இடத்தின் மீது அமைந்துள்ள ஏர்போர்ட்-ற்க்கு டேபிள் டாப் ஏர்போர்ட் என்று பெயர்.கேரளாவில் மலையின் மீது அமைந்துள்ள ஒரே ஏர்போர்ட் இந்த கோழிக்கோடு விமான நிலையம் தான்.இது மலையின் உச்சிப்பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால் விமானங்களை தரையிறங்குவது சற்று கடினமான ஒன்றாகும்.அங்கு ரன்வேயில் நீளம் குறைவாக உள்ளதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்களால் கூறப்படுகின்றது.