கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!

Photo of author

By Sakthi

கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!

Sakthi

Maintenance work at Isha Yoga Center Coimbatore!! Dhyanalingam Adiyogi campus will be closed on May 30!!
கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!
கோவை மாவட்டம் ஈஷாவில்  பராமரிப்பு பணி காரணமாக தியானலிங்கம், ஆதியோகி வளாகங்கள் மே 30ம் தேதி மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அன்றைய தினம் அதாவது நாளை(மே 30) பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஈஷா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்ற பல உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி ஆகியவற்றை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக நாளை அதாவது மே 30ம் தேதி ஈஷா வளாகம் முழுவதும் மூடப்படும் எனவும் பக்தர்கள் மே 31ம் தேதி முதல் வழக்கம் போல தரிசிக்கவும் தியானம் செய்யவும் அனுமதிக்கபடுவர் எனவும் ஈஷா யோகா மையம் அறிவித்துள்ளது.