இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!!
இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நான்கு இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளது. இதனால் சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சக்கர வாகனங்களின் செல்லும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓட்டுனர் உரிமம் மிக முக்கியமாக அமையும். வாகனங்களில் இருக்க வேண்டிய ஐந்து ஆவணங்கள் இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதிப்பார்கள் இது வழக்கமாக நடைபெறுகிற ஒரு விஷயமாக உள்ளது.
தற்போது எல்லாம் இருசக்கர வாகனங்களிலும் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று பலருக்கு தெரியாமல் இருக்கிறது 2017 ஆம் ஆண்டு இந்திய அரசு இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு பொருத்தப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தை கொண்டு வர முக்கிய காரணம் இருசக்கர வாகனத்தில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருப்பதால் அதிக அளவில் விபத்துக்கள் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள் எந்த ஒரு கட்டத்திலும் முகப்பு விளக்கு ஒளிந்து கொண்டே இருந்தால் எதிரே வரும் ஓட்டுனருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் இதனால் இவைகள் கட்டாயம் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆனால் இந்த முகப்பு ஒளிர வைப்பது இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது நான்கு சக்கர வாகனங்களுக்கு கொடுக்கப்படவில்லை.
மேலும் வாகனம் ஓட்டும்போது வைத்திருக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்
1.ஓட்டுனர் உரிமம்
2.இன்சூரன்ஸ்
3.வாகன உரிமம்
4.ஆர் சி புக்
5.எமிஷன் சர்டிபிகேட்
6.எப் சி
ஏதேனும் ஒரு அடையாள அட்டை
பொதுவாக எமிசன் சர்டிபிகேட் என்பது வாகன புகை சான்றிதழ் என்பார்கள். இந்தச் சான்றிதழ் வாகனம் வாங்கி ஒரு வருடத்திற்கு தேவையில்லை ஒரு வருட சென்ற பின் வாகனப் புகை சான்றிதழ் வாங்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த சான்றிதழ் இல்லை என்றால் உங்கள் மீது அவதாரம் விதிக்கப்படும்.
வாகனம் வாங்கி முதல் 15 வருடத்திற்கு எப்சி சர்டிபிகேட் தேவைப்படாது நீங்கள் வாகனம் வாங்கி 15 வருடங்கள் கடந்த பின் இந்த எப்சி சர்டிபிகேட் வைத்திருப்பது மிகவும் அவசியம்.