மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு எகிறும் மாளவிகா மோகனனளின் மார்க்கெட்!

Photo of author

By Sakthi

கோலிவுட் வட்டாரத்தில் பேட்ட , மாஸ்டர் , போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் மலையாளத் திரைப்படத்தில் புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பெண்ணாக நடித்து இருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தற்சமயம் நடிகர் தனுஷின் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் என்பதால் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வித்தியாச வித்தியாசமா வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துபவர் மாளவிகா மோகனன் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கவர்ச்சியான உடைகளுடன் வலம் வருவது தான் இவருடைய வழக்கம்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது அது எந்த அளவுக்கு உண்மையென இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை .