இசைபுயலின் மலையாள படத்தின் ட்ரைலர் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!!
29 வருடம் கழித்து நம்ம இசை புயல் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார்.பாகத் பாசில் நடிக்கும் மலையான் குஞ்சு படத்தின் ஷூட்டிங் முடிந்து பிப்ரவரி மாசம் ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.
இந்த நேரத்தில் நம்ம பாகத் பாசிலுக்கு ஒரு யோசனை தோன்றியது.உடனே எடிட் பண்ண படத்தை நம்ம இசை புயலுக்கு போட்டு காட்டுனார்.அப்புறம் நடந்ததெல்லாம் மெஜிக் தான்.ரஹ்மான் ஐ பின்னணி இசை அமைக்க சொல்லலாம் என்று நினைத்தார் பகத் பாசில்.
இசை புயலுக்கும் அவர்களின் கதையும் மேக்கிங்கும் பிடித்துப்போனதால் உடனே ஒத்துகிட்டாராம்.ரிலீஸ் ஆக போற இந்த நேரத்தில் இந்த மிக பெரிய சர்பிரைஸ்,ஒட்டு மொத்த டீம் யும் சந்தோஷத்தில் கொண்டாட வைத்திருக்கிறது.
என்னடா.. ரஹ்மான் ரெண்டாவது பண்ண போற மலையாள படம் அடுஜீவிதம் என்று நினைத்த எல்லாருக்கும் இது ஒரு மியூசிக்கல் ஷாக் தான்.மலையான் குஞ்சு படத்தோட ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு.ஒரு நாட்டான் கேரக்டர் லுக்கில் பாகத் பாசில் நடித்திருக்கிறார்.
கர்ணன் புகழ் ரஜீஷ்யா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை ஒரு திரில்லர் ஜார்னரில் எடுத்துருக்கிறார்கள்.ட்ரைலரில் விஷுவல் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது.
ட்ரைலரின் பெரிய பிளஸ் இசைபுயல் பிஜிம். முதன்முறையாக இந்த கதைகளத்தில் இசை அமைப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கு.அதை உறுதிபடுத்தும் விதமாக மாஸ் பிஜிம் கொடுத்துருக்கிறார் நம்ம இசை புயல்.
படத்தோட டைரக்டர் சஜி மோன் பிரபாகர். கதை மற்றும் ஒளிப்பதிவு மகேஷ் நாராயணன்.இசை சுஷின் ஷ்யாம்.ரெண்டு பாடல்களுடன் பின்னணி இசை அமைக்கிறார் நம் இசைபுயல் ஏ ஆர் ரஹ்மான்.படத்தை பாகத் பாசில் தயாரித்திருக்கிறார்.