கட்சி பெயரிலே கூட்டணியை அறிவித்த மல்லை சத்யா.. வைகோவை வீழ்த்த இது தான் சரியான வழி!!

0
256
Mallai Sathya announced the alliance in the name of the party.. This is the right way to defeat Vaiko!!
Mallai Sathya announced the alliance in the name of the party.. This is the right way to defeat Vaiko!!

TVK DVK: 2026 யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக இறங்கியுள்ளன. மக்களை சந்திக்கும் பணிகளும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் விஜய் கட்சி துவங்கியுள்ளார். இவரது கட்சியான தவெக யாரும் எதிர்ப்பார்த்திடாத அளவு ஆதரவை பெற்றது. இதற்கு காரணம் விஜய்யின் பிரபலம் தான் என்ற விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் தவெகவின் வருகையிலிருந்தே மீளமுடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது புதிதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் வருகையையும் வரவேற்றிருக்கிறது. நேற்று தனது கட்சியின் பெயரை அறிவித்த மல்லை சத்யா அதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் பல்வேறு விவாதங்களுக்கு ஆளாக்கபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்-திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயருடன் ஒத்துப் போவதால், மல்லை சத்யா தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று யுகங்களும் பரவி வருகிறது. அதன் காரணமாக தான் முன் கூட்டியே யோசித்து தவெக கட்சியின் பெயரை போலவே தம் கட்சிக்கும் பெயர் சுட்டி இருக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் மதிமுக சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதால் மதிமுகவை வீழ்த்த விஜய் தான் ஒரே வழி என்று மல்லை சத்யா முடிவெடுத்து இருக்கிறாராம்.

Previous articleபாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது.. ஆட்சி இபிஎஸ் கையில்!! அதிமுகவின் டாப் தலை கொடுத்த பதில்!!
Next articleகோவை மதுரையில் சதி செய்யும் திமுக அரசு.. நயினார் சொன்ன சீக்ரெட்!!