வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!!

0
200
#image_title

வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!

 

மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதைத் தொடர்ந்து படக்குழு மாஸான ஒரு போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை தெரிவித்துள்ளது.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கதாநாயகியாகவும் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

நடிகர் உதய்நிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை ரெட்ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக நடிகர் உதய்நிதி அவர்களே தயாரித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. மாமன்னன் திரைப்படம் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கின்றது.

 

சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாணடமாக நடந்து முடிந்தது. இதையடுத்து படக்குழு மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை நேற்று அறிவித்தது. அதாவது ஜூன் 16ம் தேதி மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று மாமன்னன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் நேரத்தையும் அறிவித்துள்ளது. மாமன்னன் படக்குழு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை ஒரு மாஸான போஸ்டரை ரிலீஸ் செய்து கூறியுள்ளது. அதன்படி மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜூன் 16ம் தேதி அதாவது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

 

Previous articleஅமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!
Next articleடிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!