விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

Photo of author

By Hasini

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

Hasini

Man cannot be sent into space at present! Sorry Project Director!

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார். கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும், மூன்றாவது நிலவு பயணம் தள்ளிப் போகிறது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் விமான பயணம் போல விண்வெளிக்குச் செல்வதற்கு வாகனங்கள் கூட உருவாகும்.

செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறுகள் ஆராயப்படும். மேலும் சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும் என்றும் நிலத்திலும் நீரிலும் வரும் எல்லைப் பிரச்சினைகள் வானிலும் வரக்கூடாது என விஞ்ஞானிகள் அனைவரும் செயல் ஆற்றி வருகின்றார்கள். மேலும் வானில் உள்ள செயற்கைக் கோள் கழிவுகளை அகற்ற முயற்சிகளும் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.