மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்!

Photo of author

By Sakthi

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இந்த தலத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம். கேரள மாநில பவானியில் ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் கூடிய எளிமையான ஆலயம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தை கேரளப் பகுதியை ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன் கட்டமைத்ததாக சொல்கிறார்கள்.

இந்தக் கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலை போலவே பெண்கள் இங்கே இருமுடி கட்டி செல்வார்கள்.

கருவறைக்குள் தரையில் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மேல்தான் புற்று வளர்ந்திருக்கிறது. இது தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருவறையில் 15 அடி உயரம் வளர்ந்து மேற்கூரையை நோக்கி நிற்கும் புற்று தான் பகவதி அம்மனாக வழிபடப்படுகிறது.

புற்றில் சந்தன முகத்துடன் காட்சிதரும் மூலவர் முன்பாக வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், பகவதி அம்மன் காட்சி தருகிறார்.

பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம், ஆகியவற்றைக்கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நெய் வைத்தியமாக படைத்தால் தலைவலி குணமாகும் என சொல்கிறார்கள்.

இந்த கோவிலில் நடைபெறும் மாசி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என சொல்லப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது.