தாலி தோஷமுள்ள பெண்கள் வழிபட வேண்டிய திருக்கோவில்!

Photo of author

By Sakthi

திட்டை திருத்தலம் கோவிலும் எதிரே திருக்குளமும் அழகுற அமைந்திருக்கிறது ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் குருவின் பார்வை நிச்சயம் குருவருள் வேண்டும் குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம் என புராணமும் தெரிவிக்கிறது.

உமையவள் சிவபெருமானை மணமுடிக்க வேண்டினார் குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தார் திட்டை திருத்தளத்துக்கு வந்தார். தேவகுருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குரு பார்வை கிடைக்கப்பெற்றார். அதோடு சிவபெருமானையும் திருமணம் முடித்தார் என புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மிக விரைவில் திருமணம் நடைபெறும். வயது தாமதித்து கொண்டே இருந்தால் இந்த கோவிலுக்கு சென்று வரலாம், மிக விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும், கிடைக்கும். குரு பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றமடையும் என்று சொல்லப்படுகிறது.