இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

0
102

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இது ஒருபுறம் உலக நாடுகளிடையே பீதியை கிளம்பினாலும் மறுபுறம் உலகளவில் சுகாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகளவில் பல சுகாதார கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது..

இதனை உலக நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றன. ஆனால் நோய்த்தொற்று என்பது ஒரு கொடூர அரக்கன் அதனை என்பதால் அந்த நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்று உலக நாடுகள் அனைத்தும் யோசித்து வருகின்றன. மேலும் அந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த நாடுகளில் இந்த நோய் தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனராக இருக்கும் மருத்துவர் பெட்ரோஸ் அதானோம் கேப்ரியேஸஸ் இந்தியா வந்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகமயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்பதற்காக அவர்கள் இங்கே வந்ததாக சொல்லப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் அவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா நேற்று சந்தித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்றன வலைதள பதிவில் ஆயுர்வேதத்தை சர்வதேச மருத்துவ முறையாக வளர்ப்பது தொடர்பாக அவருடன் விவாதித்ததாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாகவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன் டெல்லி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திற்கு கெப்ரியேசஸ் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் தென்கிழக்காசிய பிராந்திய உலக சுகாதார நிறுவன மண்டல இயக்குனர் மருத்துவர் பூனம் பால்சிங் சென்றார் என சொல்லப்படுகிறது.

Previous articleஎம்பிபிஎஸ் முடித்து இருக்கிறீர்களா மாதம் 75000 சம்பளத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!
Next articleபாகிஸ்தானில் பதவியேற்றது புதிய அமைச்சரவை! முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் விமர்சனம்!