2 டன் எடை கொண்ட திராட்சையால் விநாயகருக்கு அலங்காரம் செய்து அசத்திய விவசாயிகள்;

Photo of author

By Sakthi

மராட்டிய மாநிலத்தின் புதிய நகரில் இருக்கின்ற ஸ்ரீமந்த் தகதுசேத் ஹால்வாய் கணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தி தினம் அனுசரிக்கப்பட்டது இதனையடுத்து கோவிலிலுள்ள கணபதிக்கு 2 டன் எடை கொண்ட திராட்சையால் அலங்காரம் செய்யப்பட்டது. கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழங்களும், பூக்களும் விநாயகருக்கு படைக்க பட்டதாக தெரிகிறது, இதற்காக நாசிக் நகரிலுள்ள விவசாயிகள் திராட்சைகளை வழங்கியிருக்கிறார்கள். விநாயகருக்கு அலங்காரம் செய்யும் பணிகளுக்கு உதவியாகவும் அவர்கள் இருந்திருக்கிறார்கள். இதன் பின்னர் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள். இதுதொடர்பாக அலங்கார வேலைகளுக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் கேள்வி போது அவர்கள் தெரிவித்ததாவது, விநாயகருக்கு காட்சிகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த திராட்சைகள் அதன்பிறகு பல்வேறு என்.ஜி.ஒக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.