தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி டிரெய்லர் வெளியாகவில்லை!!! ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு!!! நடிகர் விஷால் அளித்த பதில் என்ன!!?

0
189

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி டிரெய்லர் வெளியாகவில்லை!!! ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு!!! நடிகர் விஷால் அளித்த பதில் என்ன!!?

இன்று(செப்டம்பர்3) காலை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரேய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்பொழுது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, சுனில், இயக்குநர் செல்வராகவன், ரிது வர்மா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று(செப்டம்பர்2) மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 3ம் தேதி காலை 10.08 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மார்க் ஆண்டனி படக்குழு அளித்துள்ளது. அதாவது முன்பு அறிவித்தபடி சரியான நேரத்திற்கு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இதற்கு நடிகர் விஷால் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படம் டிரெய்லர் வெளியாகாதது குறித்து நடிகர் விஷால் எக்ஸ் பக்கத்தில் “தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, சென்னையில் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியீட்டு விழாவின் போது #MarkAntonyTrailer வெளியீடு நடைபெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும், உங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்! இன்று மாலை 6:30 மணி முதல் #WorldOfMarkAntony க்கு வரவேற்கிறோம்! டிரெய்லர் தமிழில் நடிகர் கார்த்தி அவர்களும் மற்றும் தெலுங்கில் ராணா டகுபதி அவர்களும் மூலம் வெளியிடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Previous articleபேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!
Next articleஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!