ADMK TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரவு. இது தினந்தோறும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், சமீப காலமாகவே தவெகவில் முக்கிய அமைச்சர்களின் வருகையும், தொண்டர்களின் இணைவும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.
இவருக்கு தவெகவில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவர் சேர்ந்த பின்பு தான் நாஞ்சில் சம்பத் மற்றும் சில அதிமுகவின் முக்கிய முகங்கள் தவெகவில் சேர்ந்தனர். இதனால் இவர் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு அடித்த அதிஷ்ட்ம் என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தவெகவில் சேர்க்கும் பணியை செங்கோட்டையன் தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை தவெகவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை செங்கோட்டையன் மூலம் நடைபெற்று வந்தது.
ஓபிஎஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், அரசியலில் அவருடைய பணி குறைந்து கொண்டே செல்கிறது என்பதாலும், இதனை சரிக்கட்ட அவர் தவெகவில் இணைய சம்மதித்து விட்டார் என்றும் பலர் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் விஜய் கட்சியில் இணைவது கிட்ட தட்ட உறுதியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஈரோட்டில் 18 ஆம் தேதி நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் வைத்தியலிங்கம் அதிகாரபூர்வமாக இணைய போவதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

