வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

0
142

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது.

 

இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

 

கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லா பகுதியில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு முதலான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஏற்கனவே சிம்லா பகுதியை சேர்ந்த ஆஷிஸ் சிங் என்பவருக்கும் குல்லு பகுதியை சேர்ந்த ஷிவானி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இந்த திருமணத்தை குல்லுவில் நடத்தலாம் என்று திருமண வீட்டார் முடிவு செய்திருந்தனர்.

 

ஆனால் சிம்லா முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வெளியில் இருந்து அதாவது மாநிலத்தின் மற்ற.பகுதிகளில் இருந்து குல்லுவுக்கு யாரும் வரவேண்டாம் என்று.அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த திருமண வீட்டார் கல்யாணத்தை வீடியோ கால் வழியாக நடத்தி வைத்துள்ளனர். அவரவர்கள் வீட்டிலிருந்தபடியே மணமகன் ஆஷிஸ் சிங் அவர்களும் மணமகள் ஷிவாணியும் வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோ கான்ப்ரன்ஸ் திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று வீடியோ காண்ப்ரன்ஸ் வழியாகவே மணமக்களை வாழ்த்தினர்.

 

இந்த வீடியோ கான்ப்ரன்ஸ் திருமணம் கொரோணா நோய்த் தொற்று காலத்தில் அதிகம் கடைபிடிக்கப்பட்டது. திருமணம், காது குத்து போன்ற சில நிகழ்வுகள் வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. 144 தடை உதத்ரவு அமலில் இருந்ததாலும் நோய் தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தாலும்.மக்கள் வீட்டுக்குள்ளேய இருந்து வீடியோ கால் வாயிலாக அனைத்து நிகழ்வுகளையும் பார்த்தனர்.

 

Previous articleஅறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!!
Next articleமுதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!!