மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்!

மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மதியம் லாரியும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மாருதி வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர். அதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து மேலும் விசாரிக்கும் போது இந்த தகவல்கள் கிடைத்தன. மொடக்குறிச்சி அருகே உள்ள ஈச்சம்பள்ளம் கிராமம் முத்து கவுண்டம்பாளையம் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. 20 வயதான இவர் இவரது உறவினர்கள் மஞ்சு, தெய்வானை, அருக்காணி, முத்துசாமி, குமரேசன் மற்றும் மோகன் ஆகியோருடன் மொடக்குறிச்சி சேர்ந்த பிரகாஷ் என்கிற படையப்பா என்பவரின் வாடகை மாருதி வேனில் பழனி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர்.

வீடு திரும்பியபோது சிவகிரி அருகே பாரப்பாளையம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்ற சமயத்தில் எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் அப்பளமாக அந்த கார் நொறுங்கியது. அப்பளம் போல் நொறுங்கிய அந்த வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேரும் அந்த சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில் தேன்மொழி மற்றும் அருக்காணி, தெய்வானை மற்றும் மாருதி வேன் டிரைவர் பிரகாஷ் என்கிற படையப்பா ஆகியோர் அதே இடத்தில் உயிர் இழந்தார். எனவே அங்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். குமரேசன், முத்துசாமி, மோகன் ஆகியோர் படுகாயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment