ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல் இந்த மசாலா உருளைக்கிழங்கு ட்ரை பண்ணுங்க..!

Photo of author

By Priya

Masala Potato Fry: தயிர் சாதம், ரசம், சாம்பார் என அனைத்து சைவ உணவிற்கும் சிறந்த சைடிஸ் என்றால் அது உருளைக்கிழங்கு தான். பொதுவாக பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு, கல்லூரி செல்பவர்களுக்கு, ஆபிஸ், வேலை செல்பவர்களுக்கு அதிகமாக கொண்டு செல்லும் உணவுடன் இந்த உருளைக்கிழங்கு தினசரி இல்லை என்றாலும் வாரத்திற்கு 3 முறையினாலும் உருளைக்கிழங்கு வருவல் இடம் பெறும். உருளைக்கிழங்கு வறுவலை ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று மசாலா அரைத்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். அதே சமயம் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு-2
  • சீரகம் -1ஸ்பூன்
  • பெருசீரகம்-1ஸ்பூன்
  • மிளகு-1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் -1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள் -1ஸ்பூன்
  • பூண்டு -2 பல்
  • உப்ப- தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

முதலில் உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், பெருசீரகம், மிளகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

அதன்பிறகு இறுதியாக நன்றாக கிளறிவிட்டு கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மசாலா உருளைக்கிழங்கு தயார்.

மேலும் படிக்க: இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை.. !!இந்த தோசை ட்ரை பண்ணி பாருங்க..!!