அவசர நிலை பிரகடனம்! இலங்கையில் தீவிரமடைந்த பொதுமக்கள் போராட்டம்!

0
192

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை காரணமாக, அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகோதரரும் இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 2பேரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்திருப்பதாகவும், 1 கிலோ அரிசி 200 ரூபாய் 1 கிலோ ஆப்பிள் 1000 ரூபாயாகவும் 1 கிலோ பேரிக்காய் 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் தெரிவித்தார். அவற்றை வாங்குவதற்கு பொதுமக்களிடம் போதிய பணமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு இலங்கை அரசு எல்லாவற்றையும் சீனாவிற்கு விற்று விட்டதாகவும், இவைதான் பொருளாதார பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும், போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள். ஆகவே அதிபரும், பிரதமரும், பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் நாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous articleஇன்று மீண்டும் கூடும் தமிழக சட்டசபை! எதிர்கட்சிகள் அதிரடி ப்ளான்!
Next articleநாடாளுமன்ற மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றவிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்! என்ன விளக்கம் தரப் போகிறார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here