டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!!

0
146
#image_title

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!!

நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்கள் இமாலய சாதனையை படைத்துள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட் செய்தது. இதில் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் 19 ரன்கள் அடித்திருந்த போது இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார்.

19 ரன்கள் கடந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேலும் இவர் குவித்துள்ளார்.

7000 ரன்களை கடந்து விராட் கோஹ்லி அவர்கள் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திலும், 6536 ரன்களை எடுத்து ஷிகர் தவான் இரண்டாவது இடத்திலும் 6211 ரன்கள் எடுத்து அந்த பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 419 ரன்கள் அடித்து 4வது இடத்தில் உள்ளார்.

விராட் கோஹ்லி நேற்று நடந்த போட்டியில் அரை சதம் அடித்தார். இந்த அரை சதம் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லி அடித்த 6வது அரை சதம் ஆகும்.