இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி! ருசிகர தகவல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

Photo of author

By Sakthi

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் எல்லை பிரச்சனை மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று சொல்லப்படும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கடந்த 2012 மற்றும் 13 உள்ளிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவில்லை.

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை உள்ளிட்ட பொதுவான போட்டிகளில் மற்றும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் மோதின இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில், இந்த இரண்டு அணிகள் இடையே மறுபடியும் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி இடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது, தற்சமயம் உலக கோப்பை போட்டிகளில் மட்டும் இரண்டு அணிகளும் சந்தித்து வருகின்றன. இந்த இரண்டு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் பல வருடகாலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தனிப்பட்ட விதத்தில் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கையிலோ அல்லது என்னுடைய கையிலோ எதுவும் கிடையாது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இருநாட்டு அரசுகளின் முடிவை பொறுத்து தான் எதுவும் நடக்கும் என்று கங்குலி கூறியிருக்கிறார்.