ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ், ஆகியோரின் வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்த மதுரை ஆதீனம்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ், ஆகியோர் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். இவருடைய வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பாகவே கணித்து அமெரிக்க மக்களிடம் தெரிவித்து இருக்கின்றேன், என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கின்றார்.

கமலா ஹாரிஸ், மற்றும் ஜோ பைடன், முரண்படாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று ட்ரப்புக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஜோ பைடன் அவர்களுக்கும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் என்னுடைய ஆசீர்வாதத்தை தெரிவித்துக் கொள்கின்றேன், என்று கூறிய ஆதீனம் , இருவருமே எதிர்வரும் தேர்தலில் அதிபர்களாக வருவார்கள், என்று இரு வருடங்களுக்கு முன்பாகவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடத்திலேயே தெரிவித்து இருக்கின்றேன்.

நல்லாட்சி நடத்த போகும் இவர்கள் மூலமாக அமெரிக்கா, மற்றும் இந்தியா, ஆப்பிரிக்கா, மற்றும் கருப்பின மக்கள் வாழும் மற்ற நாட்டு மக்களிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும் வேற்றுமைகள் இருக்காது என்கிறார்.

புதிய அதிபருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். மக்கள் அனைவரும் அமைதியாக வாழ புதிய அதிபருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும் இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அன்பு உரிமையுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.