மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!

0
72

மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை மாஸான ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் மாவீரன். மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில், நடிகை சரிதா நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

மாவீரன் திரைப்படம் இந்த மாதம் அதாவது ஜூலை 14ம் தேதி வெளாயாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக  படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 

நேற்று அதாவது ஜூன் 30ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மாவீரன் படக்குழு ” நாங்கள் உங்களின் அசைக்க முடியாத ஆதரவுகளை எங்களுக்கு நீங்கள் அளிப்பதை பார்த்தோம் உங்களின் பொறுமைக்கானா பரிசை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டு இதற்காக ஒரு வீடியோ காட்சியையும் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தண்ணீர்க்குள் செல்வது போலவும் பிறகு டிரெய்லர் வெளியீட்டு தேதி வரும் விதத்தில் வெளியாட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.