IPL:2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக RCB அணியில் தக்கவைக்கப்படாதது குறித்து மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என IPL ஆட்சிக்குழு தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் RCB அணியானது, விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (11 கோடி) மற்றும் யஷ் தயாள் (ரூ.5 கோடி) மூன்று பேரை ரூ.37 கோடி களை பயன்படுத்தி தக்கவைத்துள்ளது.
ஆனால் க்ளென் மேக்ஸ்வெல், ஃபேஃப் டுபிளசி முதலிய ஸ்டார் வீரர்களை தக்க வைக்கவில்லை. என்பது ரசிகர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மேக்ஸ்வெல் தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் “மோ போபாட் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
நாங்கள் ஷூம் உரையாடலில் அமர்ந்தோம், அவர்கள் நான் தக்கவைக்க படவில்லை என்ற முடிவு குறித்து எனக்கு விளக்கினர். அது உண்மையில் ஒரு அழகான வெளியேற்ற சந்திப்பாக இருந்தது. RCB நிர்வாகத்தின் வியூகம் பற்றி என்னிடம் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் என்னிடம் பேசியது எனக்கு பிடித்திருக்கிறது.
மேலும் ஆர்சிபி அணியில் என்னுடைய பயணம் முடிந்துவிட்டது என்று நான் கூற மாட்டேன், நான் மீண்டும் ஆர்சிபிக்கு திரும்ப நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் மேக்ஸ்வெல். இவர் பேசி இருப்பதை பார்த்தால் RCB அணியில் தக்க வைக்கப்படுவர் எனக் கருதப்படுகிறது.