பெட்ரோல் மற்றும் டீசல் இன்றைய விலை நிலவரம்!

Photo of author

By Sakthi

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெயின் விலை நிலையை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன்பு வரையில் உயராமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் மறுபடியும் உயரத் தொடங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.54 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 88 ரூபாய் 34 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.